ஏமன், ஜூலை 9- கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஏமன் அரசு வழக்கறிஞர் சிறைத்துறைக்கு பிறப்பித்துள்ளார். செவிலியர் நிமிஷா அளித்த மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதில் மஹ்தி என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பான கொலை குற்றச்சாட்டில்தான் இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டிற்குக் கடந்த 2011 ஆம் ஆண்டு வேலைக்காகக் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர் சென்றார். கடந்த 2017 ஆம் ஆண்டில் அவர் ஏமன் நாட்டவர் ஒருவரைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டார். செவிலியர் நிமிஷா அளித்த மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதில் மஹ்தி என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பான கொலை குற்றச்சாட்டில்தான் நர்சு நிமிஷா சிக்கினார். கிளினிக் ஒன்று ஆரம்பித்ததில் ஏற்பட்ட பிரச்சினையையடுத்து தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து கைப்பற்றுவதற்காக மயக்க மருந்து கொடுத்துள்ளார். ஆனால் இந்த மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதால் மஹ்தி உயிரிழந்துவிடவே, கொலை குற்றச்சாட்டில் நிமிஷா சிக்கினார் . இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து ஏமன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போதிலும் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டு அதிபரிடம் இது தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது. 2017 முதல் சிறையில் உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனையை ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி உறுதி செய்தார். இதற்கிடையே, மஹ்தியின் குடும்பத்தினர், நிமிஷா குடும்பத்தினர் இழப்பீடாக பணம் கொடுத்தால் மன்னிக்கத் தயார் எனக் கூறியிருந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ரத்தத்திற்கு பதில் பணம் என சொல்லப்படும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு பணம் கொடுத்து அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டால் விடுதலையாக வாய்ப்பு இருந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ஆனால், நிமிஷா பிரியா சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டணம் தடைபட்டதால் இந்த பேச்சுவார்த்தை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஏமன் அரசு வழக்கறிஞர் சிறைத்துறைக்கு பிறப்பித்துள்ளார். எனினும், நிமிஷா விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே அவரை காப்பாற்ற உதவிகள் செய்து வரும் சமூக பணியாளர் சாமுமேல் ஜேரொம் பாஸ்கரன் கூறுகையில், ‘இன்னும் அவரை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்திய அரசுதலையிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.