Home Front Page News விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த 4 பேர் பலி

விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த 4 பேர் பலி

வாஷிங்டன்: ஜூலை 8-
அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத் குடும்பத்தினர் 4 பேர் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட ஒரே குடும்பத்தினர் 4 பேர் விடுமுறை தினத்தை கழிக்க அமெரிக்கா சென்று உள்ளனர். அட்லாண்டாவில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்த்துவிட்டு 4 பேர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்களது கார் விபத்தில் சிக்கியது. நான்கு பேரும் சென்ற கார் லாரி மீது மோதி தீ பற்றியதில் உடல் கருகி உயிரிழந்தனர்.
தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக ஹைதராபாத்திற்கு கொண்டு வரப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version