Home Front Page News ஒரு மாம்பழத்தின் விலை ரூ.900

ஒரு மாம்பழத்தின் விலை ரூ.900

ஹைதராபாத்: ஜூன் 13 –
மிகப் பெரியதாக காணப்படும் இந்த மாம்பழத்தின் விலை ரூ.900 என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
ஆனால் இது நிஜம். ‘நூர்ஜஹான்’ ரகத்தை சேர்ந்த இந்த வகை மாம்பழங்கள் மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் அதிகமாக விளைகிறது.
அக்காலத்தில் இந்த நூர்ஜஹான் மாம்பழத்தை அரசர் பரம்பரையினர் விரும்பி சாப்பிட்டதாக கூறுகின்றனர். நல்ல ருசி கொண்ட இந்த வகை மாம்பழங்கள் தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் விற்பனைக்கு வந்தது.
இவை ஒவ்வொன்றும் 2 முதல் 5 கிலோ வரை உள்ளது.
ஒரு கிலோ ரூ.300-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. வாடிக்கையாளரின் கையில் இருக்கும் மாம்பழம் 3 கிலோ எடை கொண்டது. ஆதலால், ரூ.900 கொடுத்து மாம்பழத்தை வாங்கி சென்றார்.

Exit mobile version