Home Front Page News கார், டெம்போ மோதி 8 பேர் உயிரிழந்த சோகம்

கார், டெம்போ மோதி 8 பேர் உயிரிழந்த சோகம்

புனே: ஜூன் 19 –
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் கார், டெம்போ மோதி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் ஸ்ரீராம் தாபா என்ற பகுதிக்கு அருகே காரும், டெம்போவும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புனேவில் இரவில் நடந்த சாலை விபத்து மஹாராஷ்டிரா மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Exit mobile version