Home செய்திகள் உலக செய்திகள் பாகிஸ்தானில் ஏற்கனவே ரத்த ஆறு தான் ஓடுது

பாகிஸ்தானில் ஏற்கனவே ரத்த ஆறு தான் ஓடுது

இஸ்லாமாபாத்: ஏப்.28-
கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே பிரதமர் மோடி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பேசுகையில், ‘ஒரே நேரத்தில் ரத்தமும், தண்ணீரும் பாய முடியாது’ என உறுதியாக தெரிவித்தார்.
இதை மறைமுகமாக மேற்கோள் காட்டி, பாக்., வெளியுறவு அமைச்சர் பிலவால் புட்டோ சர்தாரி பேசுகையில், ‘’சிந்து எங்கள் நதி. அது எப்போதும் போல் ஓடும். நதியின் ஓட்டத்தை நிறுத்த முடியாது. ஒரு வேளை தண்ணீரை நிறுத்தினால், இந்தியர்களின் ரத்தம் ஓடும்,’’ என, கொக்கரித்துள்ளார் பிலவால் பேச்சுக்கு இந்தியா தரப்பில் பா.ஜ., மூத்த தலைவர் பரத் கோஷ், ‘’பாகிஸ்தானில் ஏற்கனவே ரத்த ஆறு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அல்-கொய்தாவும் மறுபக்கம் ஆப்கன் தலிபான்களும் பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்து வருகின்றனர்.நாங்களும் எங்கள் பங்குக்கு தருவோம். இவர் துவக்கம் முதலே, சிறுபிள்ளைத்தனமாக பேசி வருகின்றார்,’’ என கூறியுள்ளார்.

Exit mobile version