Home Front Page News இஸ்ரேல் வான்வழி தாக்குதலில்94 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில்94 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

டெல் அவிவ், ஜூலை 4 – காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். காசாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கூறினார்.
ஆனால், ஹமாஸ் அமைப்​பினர் இதை ஏற்​றுக்​கொள்​ளாமல், உண்​மை​யான சண்டை நிறுத்​தத்​துக்கு இது வழி​வகுக்​குமா என கேள்வி எழுப்பி வரு​கின்​றனர். இதனால் காசா​வில் இஸ்​ரேல் ராணுவம் தனது தாக்​குதலை தொடர்​கிறது.
நிவாரணத்துக்கு காத்திருந்தவர்கள்: காசா​வின் முவாசி பகு​தி​யில் இஸ்​ரேல் ராணுவம் நேற்று முன்​தினம் இரவு மற்​றும் நேற்று அதி​காலை நடத்​திய வான்​வழி தாக்​குதலில் கூடாரங்​களில் தங்​கி​யிருந்த 15 பேர் உயி​ரிழந்​தனர். காசா​வில் பள்ளி கட்​டிடம் ஒன்​றின் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. காசா​வில் அறக்​கட்​டளை உதவி மையங்​கள் உட்பட பல்​வேறு பகு​தி​களில் நிவாரணப் பொருட்​கள் பெற காத்​திருந்த 45 பேரும் இஸ்​ரேல் தாக்​குதலில் உயி​ரிழந்​தனர். பல இடங்களில் நடைபெற்ற தாக்குதலில் மொத்தம் 94 பேர் உயிரிழந்தனர்.ஆனால், இந்த தாக்​குதல் குறித்து இஸ்​ரேல் ராணுவம் எந்த கருத்​தும் தெரிவிக்​க​வில்​லை. பொது​மக்​களு​டன் தங்​கி​யிருந்து ஹமாஸ் தீவிர​வா​தி​கள் இஸ்​ரேலை நோக்கி ராக்​கெட் குண்​டு​களை ஏவுவ​தாக இஸ்​ரேல் ராணுவம் குற்​றம்​சாட்​டி​யுள்​ளது.காசா​வில் நடை​பெற்ற தாக்​குதலில் இது​வரை மொத்​தம் 57,000 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

Exit mobile version