Home செய்திகள் தேசிய செய்திகள் பீஹாரில் பிரபல தொழிலதிபர் சுட்டுக்கொலை

பீஹாரில் பிரபல தொழிலதிபர் சுட்டுக்கொலை

பாட்னா: ஜூலை 5 –
பீஹாரில் பெரும் தொழிலதிபர், பா.ஜ., முக்கிய பிரமுகர் கோபால் கெம்கா, தமது வீட்டின் முன்னே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
பீஹார் மாநிலத்தில் பெரும் மருத்துவமனைகளை நடத்தி வரும் தொழிலபதிபர் கோபால் கெம்கா. இவர் பா.ஜ., முக்கிய பிரமுகர் மட்டுமல்லாமல் பல்வேறு சமூக நல அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பவர்.
பன்கிபூர் கிளப்பில் இருந்து அவர் நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தமது அடுக்குமாடி குடியிருப்பின் முன் காரில் இருந்து கோபால் கெம்கா கீழே இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதில் கெம்கா சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த எம்.பி. பப்பு யாதவ் உடனடியாக அவரது உடல் வைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்தார். அங்கு கெம்கா குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர். இந்த சம்பவம் காவல்துறையின் அஜாக்கிரதையால் நிகழ்ந்தது என்று குற்றம்சாட்டினார்.
இது குறித்து அவர் தமது எக்ஸ்வலை தள பதிவில் கூறி உள்ளதாவது:
பீஹாரில் காட்டு தர்பார் ஆட்சி உச்சத்தில் இருக்கிறது. மிக பெரும் மற்றும் பிரபல தொழிலதிபர் பாட்னாவில் காந்தி மைதானம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார். பீஹார் போலீஸ் வெட்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version