Home செய்திகள் தேசிய செய்திகள் புது அணை கட்டும் ஆப்கானிஸ்தான்! உதவும் இந்தியா?

புது அணை கட்டும் ஆப்கானிஸ்தான்! உதவும் இந்தியா?

காபூல்: மே 26 – பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல் காரணமாக நம் நாடு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் பலகோடி கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான் நம் நாட்டை பின்பற்றி பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு நம் நாடு உதவி செய்கிறதா? என்பது தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பது உள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது கடந்த 1960ம் ஆண்டில் போடப்பட்டது. உலக வங்கி மத்தியஸ்தத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் – 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் – 70% நீர்) ஒதுக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி நம் நாடு பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கி வந்தது.
இந்த சிந்து நதி தண்ணீரை வைத்து தான் பாகிஸ்தான் வளம்கொழித்தது. பல கோடி மக்களின் வாழ்வாதாரமாக இந்த சிந்து நதி நீர் தான் விளங்கி வருகிறது. பாகிஸ்தானின் மக்கள்தொகையை மொத்தம் 23 கோடி தான் என்ற நிலையில் சிந்து நதி நீர் தான் அந்த நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

Exit mobile version