Home செய்திகள் தேசிய செய்திகள் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக குறையும்

பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக குறையும்


டெல்லி, நவ. 21: தொழில் துறையில் காணப்படும் மந்த நிலையால் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையும் என தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியதாவது: கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தொழில் துறையின் செயல்பாடும் மந்த நிலையில் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி செப்டம்பர் காலாண்டில் 6.5 சதவீதமாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், நடப்பு 2024-25-ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இரண்டாவது அரையாண்டில் பொருளாதார நடவடிக்கைள் வேகமெடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதே முக்கிய காரணம். இவ்வாறு இக்ரா தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் கீழாகவே இருக்கும் என்று கடந்த சில வாரங்களாகவே இக்ரா போன்ற தர ஆய்வு நிறுவனங்கள் தங்களது மதிப்பீடுகளை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version