Home Front Page News ராகுல் பிறந்தநாள் – தமிழக முதல்வர் வாழ்த்து

ராகுல் பிறந்தநாள் – தமிழக முதல்வர் வாழ்த்து

சென்னை: ஜூன் 19 –
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; “
எனது லட்சிய சகோதரருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது ரத்த பந்தம் அல்ல.. தொலைநோக்கு சிந்தனை மற்றும் நோக்கத்தால் பிணைக்கப்பட்ட பந்தம். நீங்கள் தொடர்ந்து உறுதியாக நின்று தைரியத்துடன் வழிநடத்துங்கள். பிரகாசமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில், வெற்றி நமதே” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version