Home செய்திகள் தேசிய செய்திகள் வங்கிகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி

மும்பை, ஜூலை 4- தனிநபர்கள், சிறுதொழில் நிறுவனங்கள் பெறும் கடனின் அசல் தொகையை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால், கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. புளோட்டிங் ரேட் எனப்படும் மாறும் வட்டி முறையில் பெறப்படும் கடனுக்கு இந்த சலுகை பொருந்தும். ரிசர்வ் வங்கி உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: தனிநபர்கள் பெறும் வர்த்தக நோக்கமில்லாத கடன்கள், வர்த்தக நோக்கில் தனிநபர்கள் பெறும் சிறுதொழில் கடன்களுக்கு ப்ரீ-பேமென்ட் எனப்படும் அசலை முன்கூட்டி திருப்பிச் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. * வரும் 2026 ஜன., 1 முதல் வழங்கப்படும் கடன்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்களுக்கு இது பொருந்தும். * பொதுத் துறை வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். * கடனின் அசல் நிலுவைத் தொகை முழுதுமாக திருப்பி செலுத்தப்பட்டாலும், கட்டணம் வசூலிக்கக் கூடாது. திருப்பிச் செலுத்துவதற்கான தொகைக்கு ஆதாரம் ஏதும் தேவையில்லை.

Exit mobile version