புதுடில்லி: டிச.7-குளிர்காலம் தொடங்கிவிட்டால் அதிக அளவிலான மூடுபணியின் காரணமாக ரயில் தாமதங்கள் அடிக்கடி ஏற்படும். இதனால் ரயில் பயணிகள் சிரமப்படாமல் இருக்க வேண்டி இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில் சேவைகளுக்கு சில சிறப்பு ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இது போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகள் சிரமப்படாமல் இருப்பதற்காக அவர்களுக்கு இலவச உணவும் வழங்கப்படவுள்ளது. ஐஆர்சிடிசி-யின் கேட்டரிங் பாலிசியின் படி, பிரீமியம் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் வருகை நேரத்தை விட இரண்டு அல்லது அதற்கு மேலான மணி நேரம் தாமதமாக வந்தால் அவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். ரயில் தாமதத்தை பொறுத்து காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவும் வழங்கப்படவுள்ளது.முதலில் ரயில் பயணத்தை தொடங்குவதற்கு டீ அல்லது காபி கொடுக்கப்படுகிறது. காலை உணவு, மாலை நேரத்திற்கான டி போன்றவையும் ரயில் தாமதமாகும் நேரத்தை பொறுத்து வழங்கப்படுகிறது. அதேபோல காலை நேர உணவிற்கு 4 பிரெட் துண்டுகள், பட்டர், 200ml ஜூஸ், அதோடு ஒரு கப் டீ அல்லது காபி போன்றவை வழங்கப்படுகிறது. மதிய உணவு: IRCTC பல்வேறு மதிய மற்றும் இரவு உணவு விருப்பங்களையும் வழங்குகிறது. ராஜ்மா, தால் போன்ற பிரபலமான உணவு வகைகளும் வழங்கப்படுகிறது. உணவின் சுவையை அதிகரிக்க நீண்ட காலமாக இந்தியாவில் வழங்கப்படும் ஒரு சைடிஷ் ஊறுகாய். அதுவும் இந்த மெனுவில் அடங்கும். இதற்கு மாற்றாக பூரி, மிக்ஸட் வெஜிடபிள்ஸ் போன்றவையும் வழங்கப்படுகிறது.