Home Front Page News ஆப்கனில் இரு வேறு சாலைவிபத்துகளில் 50 பேர் உயிரிழப்பு

ஆப்கனில் இரு வேறு சாலைவிபத்துகளில் 50 பேர் உயிரிழப்பு

காபூல்:டிச.20- தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் மொத்தம் 50 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கஜினி மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் உமர் நேற்று கூறியதாவது: காபூல் – காந்தகார் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு பயணிகள் பேருந்தும் எண்ணெய் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதுபோல் இதே நெடுஞ்சாலையின் மற்றொரு இடத்தில் பயணிகள் பேருந்தும் சரக்கு லாரியும் மோதிக்கொண்டன. இவ்விரு விபத்துகளிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் 76 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் கஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பலர் காபூல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஆப்கனில் மோசமான சாலைகள் மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

Exit mobile version