Home செய்திகள் உலக செய்திகள் இராக் பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

இராக் பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

பாக்தாத், ஜூலை 18- இ​ராக்​கில் வணிக வளாகத்​தில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 61 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து குறித்து விசா​ரணை நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. கிழக்கு இராக்​கின் வசிட் மாகாணம் குட் நகரில் ஒரு வாரத்​துக்கு முன்பு ஒரு புதிய வணிக வளாகம் திறக்​கப்​பட்​டது. 5 தளங்​களைக் கொண்ட அதில் உணவகம், சூப்​பர் மார்க்​கெட் உள்​ளிட்​டவை இயங்கி வரு​கின்​றன. இந்​நிலை​யில், புதன்​கிழமை இரவு அந்த வணிக வளாகத்​தில் தீ விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்​புப் படை​யினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று தீயை அணைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். மீட்​புப் படை​யினரும் பாதிக்​கப்​பட்​ட​வர்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். இதனிடையே, பிரதமர் முகமது ஷியா அல்​-சு​தானி உத்​தர​வின் பேரில் உள்துறை அமைச்​சர் சம்பவ இடத்​துக்​குச் சென்று மீட்​புப் பணி​களை முடுக்​கி​விட்​டார். இதுகுறித்து இராக் உள்துறை அமைச்​சர் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வணிக வளாகத்​தில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி பெண்​கள், குழந்​தைகள் உட்பட 61 பேர் உயி​ரிழந்​தனர். இதில் 14 பேரின் உடல்​கள் அடை​யாளம் காண முடி​யாத வகை​யில் கருகி உள்​ளன. 45-க்​கும் மேற்​பட்​டோரை மீட்​புக் குழு​வினர் பத்​திர​மாக மீட்​டனர்” என கூறப்​பட்​டுள்​ளது. இந்த விபத்து தொடர்​பான வீடியோ மற்​றும் புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் பகிரப்​பட்டு வரு​கின்​றன. கட்​டிட உரிமை​யாளர் மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதுகுறித்து மாகாண ஆளுநர் முகமது அல்​-மயே வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வணிக வளாக தீ விபத்தை அடுத்து 3 நாட்​களுக்கு அரசு முறை துக்​கம் அனுசரிக்​கப்​படு​கிறது. தீ விபத்​துக்​கான காரணம் குறித்து விசா​ரணைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்த சம்​பவத்​தில் நேரடி​யாகவோ மறை​முக​மாகவோ காரண​மானவர்​களுக்கு கருணை காட்ட மாட்​டோம் என உறுதி அளிக்​கிறோம். முதல்​கட்ட வி​சா​ரணை அறிக்கை 48 மணி நேரத்​தில் வெளி​யிடப்​படும்​” என கூறப்​பட்​டுள்​ளது.

Exit mobile version