நியூயார்க், ஜூலை 18- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக நேற்று முதல் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2006ம் ஆண்டுக்கு பிறகு எந்த அமெரிக்க அதிபரும் பாகிஸ்தானுக்கு செல்லாத நிலையில் சுமார் 20 ஆண்டுக்கு பிறகு டிரம்ப் செல்வதாக கூறப்பட்ட தகவல் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் செல்லும் திட்டம் டிரம்புக்கு இல்லை என்று வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. உலகம் முழுவதும் பாகிஸ்தானில் இருந்து தான் பயங்கரவாதிகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் பயங்கரவாதத்தால் நம் நாடும் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்’டை சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதையடுத்து நம் நாடு ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை பந்தாடியது.