Home Front Page News ஜெய்ப்பூர் பெட்ரோல் கிடங்கு அருகே பெரும் தீ: 5 பேர் பலி

ஜெய்ப்பூர் பெட்ரோல் கிடங்கு அருகே பெரும் தீ: 5 பேர் பலி

ஜெய்ப்பூர்: டிச.20-
ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கு அருகே, ஏற்பட்ட தீ விபத்தில், 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பெட்ரோல் நிரப்புவதற்கு 40க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. பெட்ரோல் கிடங்கிற்கு அருகே, ரசாயனப்பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி, மற்ற வாகனங்களோடு மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 40 லாரிகளிலும் தீ விபத்தில் எரிந்து சாம்பலானது.
இதையடுத்து மளமளவென தீ பரவ துவங்கியது. அங்கு 40 லாரிகளிலும் தீ பற்றியது. அப்பகுதியில் கரும்புகைகள் சூழந்தன. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 20 வாகனங்களில், விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Exit mobile version