Home Front Page News வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு – 2 பேர் பலி

வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு – 2 பேர் பலி

கத்ரா: ஜூலை 21-
ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குதிரை சவாரி மூலம் யாத்திரை செல்லும் வழியான குல்சான் கா லங்கர் அருகே உள்ள பங்காங்கா பகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த குப்பன், 70, அவரது மனைவி ராதா, 66, ஆகியோர் உள்பட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், குப்பன் உள்பட இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மண் மற்றும் கற்களை உடனடியாக அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக மதியம் 1 மணி வரையில் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version