Home செய்திகள் தேசிய செய்திகள் 57 முறை இட இடமாற்றம் செய்யப்பட்டஐ.ஏ.எஸ்., அதிகாரி பணி ஓய்வு

57 முறை இட இடமாற்றம் செய்யப்பட்டஐ.ஏ.எஸ்., அதிகாரி பணி ஓய்வு

புதுடில்லி:ஏப்.30- தன் 34 ஆண்டு ஐஏஎஸ் பணியில், 57 முறை பணியிட மாறுதல் செய்யப்பட்ட அதிகாரி அசோக் கெம்கா இன்று பணி ஓய்வு பெறுகிறார்.மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் அசோக் கெம்கா (வயது 59) பிறந்தார். இவர், 1991ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பணியில் இணைந்தார். தனது பணி காலத்தில், 57 முறை பணியிட மாறுதல் செய்யப்பட்டார். ஆனாலும் ஊழலுக்கு எதிரான அவரது போராட்டம் இடைநிற்கவில்லை. தற்போது போக்குவரத்துத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்தார். இப்பதவியில் 2024ம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பணி ஓய்வு பெறுகிறார்.
யார் இந்த அசோக் கெம்கா?

  • இவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய குருகிராம் நில ஊழலை கண்டுபிடித்தார். அது தொடர்பான பரிவர்த்தனையை 2012ம் ஆண்டு ரத்து செய்தார்.
  • இதன் மூலம் இவர் பிரபலம் அடைந்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.
    இவர் எம்.பி.ஏ., முடித்துள்ளார். இவர் தொழில்நுட்ப நிபுணர் மட்டுமல்ல, சட்டம், நிர்வாகம் மற்றும் நிதியியலிலும் தேர்ச்சி பெற்றவர்.
  • இவர் 6 மாதங்களுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்பட்டார்.
    *2023ம் ஆண்டில், கெம்கா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கடிதம் எழுதி, ஊழல் தடுப்புத் துறை மூலம் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
  • இவர் ஊழலுக்கு எதிரான உண்மையான போர் நடத்தப்படும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தப்பிக்க முடியாது என உறுதி அளித்து இருந்தார். தனது பேட்ச்மேட்களின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் வாழ்த்து தெரிவித்தார்.* 1988ல் ஐ.ஐ.டி. கரக்பூரில் கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்றார். பின்னர் டி.ஐ.எப்.ஆர்ல் பி.எச்.டி. பட்டமும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றார்.
Exit mobile version