Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

டெஹ்ரான், ஜூன் 29- மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்த தாக்குதல், 12 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்தது. ஈரானின் அணுசக்தி மையம், ராணுவ தளங்களை குறிவைத்து, இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. இதில், ஈரானிய ராணுவத்தின் 30 முக்கிய தளபதிகள் மற்றும் 11 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், ஈரானின் துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டார். பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் தலைவரான ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாதே, அணு விஞ்ஞானிகளான பெரிடவுன் அப்பாஸி, முகமது மெஹ்தி தெஹ்ரான்சி ஆகியோரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஈரானிய ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள், நான்கு பெண்கள், நான்கு குழந்தைகள் உட்பட 60 பேருக்கு, நேற்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஆசாதி தெருவில், உடல்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்று இரங்கல் தெரிவித்ததுடன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.பொதுவாக இது போன்ற சடங்குகள், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி முன்னிலையில் நடைபெறும். ஆனால், நேற்றைய நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை.

Exit mobile version