Home செய்திகள் உலக செய்திகள் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்..” டிரம்பிற்கு எதிராக ஃபத்வா வெளியிட்ட ஈரான்

எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்..” டிரம்பிற்கு எதிராக ஃபத்வா வெளியிட்ட ஈரான்

தெஹ்ரான்: ஜூன். 30-இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் கடந்த சில வாரங்களாகவே நீடித்தது. அமெரிக்கா தலையிட்டுத் தாக்குதல் நடத்திய பிறகே இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் மத்தியக் கிழக்கில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. இதற்கிடையே ஈரானின் மூத்த குருமாரான அயதுல்லா ஷிராஸி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தலைவர்களுக்கு எதிராக ஃபத்வா கொடுத்துள்ளார். இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோதல் வெடித்திருந்தது. முதலில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. அதைத் தொடர்ந்து ஈரானும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. இரு நாடுகளும் இதுபோல மாறி மாறி தாக்கிக் கொண்டன. இறுதியில் அமெரிக்கா உள்ளே வந்து ஈரானின் அணு உலைகள் மீது பங்கர் பஸ்டர் பாம்களை வீசின.மத்தியக் கிழக்கு அதன் பிறகே மோதல் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் ஈரான் நாடுகள் தாக்குதலைத் தொடர மாட்டோம் என அறிவித்தன. இதன் மூலம் 12 நாள் மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம் அந்தப் பிராந்தியத்தில் முழுமையாக அமைதி திரும்பிவிட்டதாக நாம் கருத முடியாது. இதற்கிடையே ஈரானின் மூத்த குருமாரான ஈரானின் கிராண்ட் அயதுல்லா மகரேம் ஷிராஸி சில முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஃபத்வா ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட மற்றும் பிற மூத்த ஷியா மதகுருமார்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களைக் கண்டித்துள்ள அவர், இதற்காக ஃபத்வாவும் வழங்கியிருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை “எதிரிகள்” என்று அறிவித்து, அவர்களின் நடவடிக்கைகளைக் கண்டித்து அரபு மொழியில் ஒரு ஃபத்வாவை அயதுல்லா நாசர் மகரேம் ஷிராஸி வெளியிட்டு இருப்பதாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.. Powered By Ayyanar Thunai | தமிழர்களின் காவல்தெய்வம் அய்யனார் வரலாறு – விக்கி கண்ணன் | Oneindia Tamil 5 5 பெரிய பாவம் இது குறித்து ஷிராஸி கூறுகையில், “இஸ்லாமிய அமைப்பின் தூணாக இருக்கும் எந்தவொரு நபரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுவது குறிப்பாக உயர்மட்டத் தலைவருக்கு எதிராகக் கருத்து சொல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அவர்களைப் பாதுகாப்பதும், அத்தகைய அச்சுறுத்தல்களைச் செய்பவர்களை எதிர்கொள்வதும் நமது கடமையாகும். மேலும் இதைச் செய்வோர் மிகப் பெரிய பாவத்தைச் செய்கிறார்கள். மேலும், இஸ்லாமியக் குடியரசின் தலைமையை அச்சுறுத்தியதற்காக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தலைவர்களை ஒன்று திரண்டு வீழ்த்த வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த எதிரிகளுக்கு முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமிய நாடுகள் வழங்கும் எந்தவொரு ஆதரவும் “ஹராம்” அல்லது தடை செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்று அந்த ஃபத்வாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. Also Read ரூ.3.5 லட்சம் கோடி.. மோதல் 12 நாள் மட்டுமே நீடித்தாலும் இழப்பு ரொம்ப பெரிசு! யாருக்கு நஷ்டம் அதிகம்? பழிவாங்கப்படுவார்கள் அதில் மேலும், “உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இத்தகைய எதிரிகளுக்கும் அவர்களின் குற்றங்களுக்கும் எதிராக உறுதியாக நிற்க வேண்டும். எதிரிகளுக்கு அவர்கள் உதவினார் அவர்கள் கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள், மேலும் அவர்கள் நிச்சயமாகப் பழிவாங்கப்படுவார்கள்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களை வெளிப்படையான குற்றங்கள் என்று ஷிராஸி முஹாரிப் குறிப்பிட்டு இருக்கிறார். இதுபோல செய்வோர் கடவுளுக்கு எதிராகப் போர் செய்வதாகவே கருதப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரானில் இவை கடுமையான குற்றமாகக் கருதப்படும்.. இதற்கு இது மரண தண்டனை கூட விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version