புதுடில்லி: ஜூலை 4-டில்லியில், பணியில் அலட்சியமாக இருந்ததற்காக திட்டியதால் முதலாளியின் மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தப்பிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். டில்லியின் லஜ்பத் நகரில், குல்தீப் சேவானி என்பவர் தன் மனைவி ருச்சிகா மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மகனுடன் வசித்து வந்தார். அதே பகுதியில், அவர் துணிக்கடை நடத்தி வந்தார். அவரிடம் ஓட்டுநராக, பீஹாரின் ஹிஜாப்பூரைச் சேர்ந்த முகேஷ் என்பவர், நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். அவ்வப்போது, வீட்டு வேலைகளையும் அவர் செய்து வந்தார். சமீபத்தில், பணியில் அலட்சியமாக இருந்ததற்கு குல்தீபின் மனைவி ருச்சிகா, முகேஷை திட்டியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், குல்தீப் இல்லாத நேரம் பார்த்து நேற்று முன்தினம் இரவு அவரின் வீட்டுக்கு முகேஷ் சென்றார்.
தன்னை திட்டிய ருச்சிகா மற்றும் அவரின் 14 வயது மகனை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொன்றார். பின், வீட்டின் கதவை பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றார்.