திருப்பதி: மே 29-
திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (மே 28-ஆம் தேதி) 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 31 காத்திருக்கும் அறைகளும் நிரம்பி ஏடி கெஸ்ட் அவுஸ் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் மே 28-ஆம் தேதியான நேற்று மொத்தம் 83,621 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 33,445 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 3.97 கோடியாகும். சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 31 காத்திருக்கும் அறைகளும் நிரம்பி ஏடி கெஸ்ட் அவுஸ் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ரூ. 300 சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.