Home செய்திகள் தேசிய செய்திகள் யுபிஐ விதிகளில் வரும் அதிரடி மாற்றம்

யுபிஐ விதிகளில் வரும் அதிரடி மாற்றம்

மும்பை: மே 29-நமது நாட்டில் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக யுபிஐ பல மடங்கு அதிகரித்து விட்டது. இதற்கிடையே யுபிஐ சேவை திடீரென முடங்குவதைத் தடுக்கும் வகையில் என்பிசிஐ புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இவை நிலையான யுபிஐ சேவை இருப்பதை உறுதி செய்யும் என என்பிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் யுபிஐ வந்த பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. யுபிஐ மூலம் பணம் அனுப்பும் போது இரு தரப்பும் எந்தவொரு கமிஷனையும் செலுத்தத் தேவையில்லை. இதனால் மக்கள் பலரும் இந்த யுபிஐ சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். வெகு சில காலத்திலேயே யுபிஐ சேவை பல மடங்கு அதிகரித்திருந்தது.இருப்பினும், சமீப காலமாக யுபிஐ சேவை அவ்வப்போது முடங்கி வருகிறது. மக்கள் இப்போது பெரும்பாலும் யுபிஐ சேவைகளையே நம்பி இருக்கும் சூழலில், திடீரென இதுபோல முடங்குவது பெரிய சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கிடையே யுபிஐ பேமேண்ட்களை கண்காணிக்கும் என்பிசிஐ இது தொடர்பாக சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இந்த புதிய விதிகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version