Home Front Page News மருத்துவமனையில் கொலை குற்றவாளி சுட்டுக் கொலை

மருத்துவமனையில் கொலை குற்றவாளி சுட்டுக் கொலை

பாட்னா: ஜூலை 18 –
பிஹார் மாநிலத்​தின் பக்​ஸர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் சந்​தன் மிஸ்​ரா. இவர் மீது பல கொலை வழக்​கு​கள் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் உள்​ளன. இவர் சமீபத்​தில் பக்​ஸர் சிறையி​லிருந்து பகல்​பூர் சிறைக்கு மாற்​றப்​பட்​டார்.
இவர் சிகிச்​சைக்​காக பரோலில் வெளிவந்து பாட்னா நகரில் உள்ள பரஸ் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இதையறிந்த இவரது எதிரணி​யைச் சேர்ந்த கும்​பல், மருத்​து​வ​மனை​யிலேயே இவரை சுட்​டுக் கொல்ல திட்​ட​மிட்​டது. இந்​நிலை​யில் பரஸ் மருத்​து​வ​மனை​யில் நேற்று காலை 5 பேர் நுழைந்​தனர். சந்​தன் மிஸ்ரா சிகிச்சை பெறும் அறையை நெருங்கியதும், 5 பேரும் சட்​டைக்​குள் மறைத்து வைத்​திருந்த கைத்​துப்​பாக்​கியை எடுத்​தனர். சந்​தன் மிஸ்ரா சிகிச்சை பெறும் அறை​யில் புகுந்து அவரை பல இடங்​களில் சுட்​டு​விட்டு தப்​பிச் சென்​றனர். இதில் சந்​தன் மிஸ்ரா இறந்​தார். கொலை​யாளி​கள் நுழையும் வீடியோ வைரலாக பரவியது.
இந்த கும்​பல், சந்​தன் மிஸ்​ஸாவுக்கு எதி​ராக செயல்​படும் சந்​தன் செரு தலை​மையி​லான ரவுடிகள் என போலீ​ஸார் அடை​யாளம் கண்​டு ஒருவரை கைது செய்தனர். மற்றவர்​களை பிடிக்​கும் முயற்​சி​யில் போலீ​ஸார் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.
இதுகுறித்து ராஷ்ட்​ரிய ஜனதா தள தலை​வர் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்​டி​யில், ‘பிஹாரில் யாருக்​கும், எங்​கும் பாது​காப்பு இல்லை. அரசு ஆதர​வுடன் செயல்​படும் குற்​ற​வாளி​கள், மருத்​து​வ​மனை​யின் ஐசியு வார்​டுக்​குள் புகுந்து சிகிச்சை பெற்ற நபரை சுட்டுக் கொன்​றுள்​ளனர். 2005-ம் ஆண்​டுக்கு முன்பு இது போன்ற சம்​பவங்​கள் பிஹாரில் நடை​பெற​வில்​லை” என்​றார். பிஹார் துணை முதல்​வர் விஜய் சின்ஹா அளித்த பேட்​டி​யில், ‘‘இச்​சம்​பவம் துரதிரு​ஷ்ட​மானது. இது குறித்து விசா​ரணை நடத்தப்படும். குற்​ற​வாளி​கள் தப்ப முடி​யாது. அவர்​களுக்கு கடுமை​யான தண்​டனை வழங்​கப்​படும் என முதல்​வர் நிதிஷ் குமார் கூறி​யுள்​ளார்” என்​றார்.

Exit mobile version