புதுடில்லி: ஏப்.28-ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், ஏப்., 22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி உயிர்கள் பலியாகின. பாக்., அரசு, – ராணுவம் – ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு ஆதரவுடன், பயங்கரவாத அமைப்புகள், ‘தி ரெஸிஸ்டன்ட்ஸ் போர்ஸ்’ என்ற பகடி பெயரில், இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளன..
பஹல்காமில் நடந்த கொலைவெறி தாக்குதலில் முக்கிய பங்காற்றியவன், அடில் ஹுசைன் தோக்கர். இவன் காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் மாவட்டம் குரீ கிராமத்தை சேர்ந்தவன். பட்டதாரியான இவன், பகுதி நேர ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 2018ம் ஆண்டு, ஏப்., 29ல், பாத்காம் எனும் இடத்தில் ஏதோ, போட்டித்தேர்வு எழுத சென்றான். பின், வீடு திரும்பவில்லை. போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவரது தாய் ஷாஜதா பானு கூறுகையில், ‘’எனது மகன் இதுபோன்ற படுபாதக செயலில் ஈடுபடுவான் என, சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவன் இந்த கொடுஞ்செயலை செய்திருந்தால், அதற்கான தண்டனையை நிச்சயம் வழங்க வேண்டும். மகனே, நீ எங்கிருந்தாலும் சரணடைந்து விடு; நாங்களாவது நிம்மதியா வாழ்கிறோம்,’’ என்றார்.