தங்கவயலில் தைப்பூசம் பெண்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு பூஜை

தங்கவயல் பிப்ரவரி 2-
தைப்பூச திருவிழா தங்க வயலில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. தங்க வயல் தொகுதியில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் தங்க வயலில் அமைந்துள்ள அனைத்து முருக பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது அதேபோல் தங்க வயல் மாரி குப்பம் ஆடி பிளாக் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர் அப்பொழுது கோவில் கமிட்டி யார் கூறுகையில். கடந்த 78 ஆண்டுகளாக தைப்பூசத் திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றோம் ஆண்டுதோறும் பால் கொடுங்கள் எடுத்துச் சென்று முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி பூஜைகள் செய்யப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு வருகின்றது அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பான முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி வந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர் அதேபோல் தேர் பவனையும் சிறப்பான முறையில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் சேர்ந்த பக்தர்களும் அதிகமாக கலந்துபால்குடம் எடுத்து வந்து பூஜைகள் செய்தனர் அதேபோல் சிலர் காவடி எடுத்து வந்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தினர் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது என்றனர்.