Home செய்திகள் தேசிய செய்திகள் முதியோர் தேசமாக மாறும் இந்தியா கேரளா முதலிடம்

முதியோர் தேசமாக மாறும் இந்தியா கேரளா முதலிடம்

புதுடெல்லி: பிப்ரவரி 5-
நாட்டில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு மக்கள் தொகையில் 15.8 சதவிகிதம் பேர் 60 வயதை கடந்த முதியோர் பட்டியலில் சேர்ந்து இந்தியா அளவில் 2ம் இடம் பிடித்து சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் மக்கள் தொகை மற்றும் மாநிலங்கள் நிதி அடிப்படியாக கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதியோர்களின் எண்ணிக்கையை பொறுத்து 3 பிரிவுகளாக மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையின்படி 15 சதவீதத்துக்கு அதிகமான முதியோர் உள்ள மாநிலங்களை முதுமை அடைந்த மாநிலங்கள் எனவும், 10 முதல் 15 சதவீதம் வரை முதியோர் உள்ள மாநிலங்கள் இடைநிலை மாநிலங்கள் என்றும், 10 சதவீதத்தை விட குறைந்த அளவில் முதியோர் உள்ள மாநிலங்களை இளைஞர் மாநிலங்கள் என்று வகைப்படுத்தி ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.