Home செய்திகள் தேசிய செய்திகள் வீட்டு லோன், வாகன லோன் எடுத்தவங்களுக்கு.. பெரிய சிக்கல்

வீட்டு லோன், வாகன லோன் எடுத்தவங்களுக்கு.. பெரிய சிக்கல்

புதுடெல்லி: பிப்ரவரி 4-
கடந்த 2025-ஆம் ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியாக வட்டி விகிதங்களைக் குறைத்து வந்த நிலையில், தற்போது அந்த வேகத்திற்கு ஒரு இடைவெளி கிடைக்கலாம் எனத் தெரிகிறது. இன்று முதல் அதற்கான 3 நாட்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாலும், நாட்டின் பொருளாதாரம் சீராக இருப்பதாலும், வரும் காலங்களில் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது என்று மத்திய பொருளாதார விவகாரச் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 3 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலில் வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டார். ரெப்போ ரேட் மாற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சாமானிய மக்களின் நலனுக்கும் வட்டி விகிதமும் பணவீக்கமும் ஒரு குறிப்பிட்ட அளவில் (Optimal level) இருப்பது அவசியம் என்று அவர் விளக்கினார். “பொருளாதார வளர்ச்சிக்கு பணவீக்கமும் வட்டி விகிதமும் ஒரு சரியான அளவில் இருக்க வேண்டும். கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து வட்டி விகிதங்களைக் குறைத்தது. தற்போது அந்த விகிதத்தைத் தக்கவைத்து வருகிறது. இது குறித்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை. தற்போது ஒரு நிலையான சூழல் நிலவுகிறது; இதுவே சில காலத்திற்குத் தொடர வாய்ப்புள்ளது,” என்று அனுராதா தாக்கூர் கூறினார்.
அரசின் இந்தத் தொனி, கடந்த காலங்களில் இருந்த வட்டி குறைப்பு நடவடிக்கைகளுக்கு தற்போது ஒரு சிறிய ‘ரெஸ்ட்’ கொடுக்கப்படலாம் என்பதை உணர்த்துகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் மொத்தமாக 125 அடிப்படை புள்ளிகள் (1.25%) வட்டி குறைக்கப்பட்டது. இதன் விளைவாக, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) 5.25 சதவீதமாகக் குறைந்தது. இது கடந்த 2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த வட்டி விகிதமாகும்.