Home மாவட்டங்கள் பெங்களூர் அதிகாலையில் 2 பேர் வெட்டிக் கொலை

அதிகாலையில் 2 பேர் வெட்டிக் கொலை

சென்னை: மார்ச் 9 –
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர். சடலங்களை கைப்பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முடிச்சூரைச் சேர்ந்த ஆறுமுகம் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்து வெளியே வந்த ஆறுமுகம் திரிசூலம் பகுதியில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், மற்றும் அங்கு இருந்த 17 வயது சிறுவன் சந்தோஷை இன்று அதிகாலையில் வீட்டில் புகுந்து மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர். முன்விரோதம் காரணமக இந்த இரட்டைக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து, சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.