
புதுடெல்லி: பிப்ரவரி 3-
மக்களவையின் பிற செயல்பாடுகளை ஒத்திவைத்துவிட்டு அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். பிரதமர் மோடி பிற நாடுகளிடம் சரணடைந்துவிட்டார் என்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டதால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 6வது நாள் அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கேள்வி நேரத்துடன் லோக்சபா தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த கோரிக்கை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்கவில்லை.இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். பிரதமர் மோடி பிற நாடுகளிடம் சரணடைந்துவிட்டார் என்று கோஷமிட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து லோக்சபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் வழக்கம்போல் சபை நடவடிக்கைகள் தொடங்கி நடந்து வருகிறது.















