Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்க ராணுவத் தளபதி ராஜினாமா செய்ய உத்தரவு

அமெரிக்க ராணுவத் தளபதி ராஜினாமா செய்ய உத்தரவு

வாஷிங்டன்: ஏப்ரல் 4-
அமெரிக்க ராணுவத் தலை​மைத் தளபதி ராண்டி ஜார்ஜை ராஜி​னாமா செய்​யு​மாறு உத்​தரவு பிறப்பிக்​கப்​பட்​டுள்​ளது.
இந்​நிலை​யில், அமெரிக்க ராணுவத் தலை​மைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்​ஜ், தனது பதவியை ராஜி​னாமா செய்து உடனடி​யாக ஓய்வு பெறு​மாறு அமெரிக்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர்​(​போர்) பீட் ஹெக்​செத் கேட்​டுக் கொண்​டுள்​ளார். இதை அமெரிக்க ராணுவத் தலை​மையக​மான பென்​டக​னும் உறுதி செய்​துள்​ளது.
ராண்டி ஜார்ஜ் நீக்​கப்​பட்​டதற்​கான காரணம் குறித்​து, எது​வும் தெளி​வாக அறிவிக்​கப்​பட​வில்​லை. இருப்​பினும், ஈரானுட​னான போரில், அமெரிக்கா சில இடத்​தில் இழப்​பு​களைச் சந்​தித்​திருப்​ப​தால் ராண்டி ஜார்ஜ் நீக்​கப்​பட்டு இருக்​கலாம் என்று தெரி​கிறது. அதே​நேரத்​தில், இது உயர்​மட்ட ராணுவத் தலை​மை​களில் நடை​பெறும் வழக்கமான ஒரு மறுசீரமைப்பு நடவடிக்​கை​தான் என்று பென்​டகன் வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.