Home செய்திகள் தேசிய செய்திகள் அயர்லாந்​தில் சிக்​கிய 220 ஏர் இந்தியா பயணிகள் மீட்பு

அயர்லாந்​தில் சிக்​கிய 220 ஏர் இந்தியா பயணிகள் மீட்பு

புதுடெல்லி, மார்ச் 20- தொழில்​நுட்​பக் கோளாறு காரண​மாக அயர்லாந்​தின் ஷானன் நகரில் தவித்​துக் கொண்​டிருந்த ஏர் இந்​தி​யா​வின் சிறப்பு விமானம் வியாழக்​கிழமை அதிகாலை தலைநகர் டெல்​லியை வந்​தடைந்​தது. கடந்த திங்​கள்​கிழமை, நியூ​யார்க்​கி​லிருந்து டெல்லி நோக்கி வந்து கொண்​டிருந்த ஏர் இந்​தி​யா​வின் ‘ஏ350’ ரக விமானம் (AI102), திடீர் தொழில்​நுட்​பக் கோளாறு காரணமாக அயர்லாந்​தின் ஷானன் நகருக்​குத் திருப்பிவிடப்​பட்​டது. அங்கு விமானம் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்​து, அதிலிருந்த 220-க்​கும் மேற்​பட்ட பயணி​களும் ஊழியர்​களும் அங்​கேயே தவிக்கும் சூழல் ஏற்​பட்​டது. இந்​நிலையில், பயணி​களை அழைத்து வர சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரிலிருந்து ‘போ​யிங் 787’ ரக சிறப்பு விமானம் ஷானன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானம் புதன்​கிழமை பிற்​பகல் இந்​திய பயணி​களை ஏற்றிக்​கொண்டு அங்​கிருந்து புறப்பட்​டு, வியாழக்​கிழமை அதி​காலை டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்தை வந்​தடைந்​தது. ரூ.20,000 நிதி​யுதவி பயணி​களுக்கு ஏற்​பட்ட சிரமத்​தைக் கருத்​தில் கொண்​டு, அவர்​களுக்​கு நல்​லெண்ண அடிப்படை​யில் தலா ரூ.20,000 கருணைத் தொகையை ஏர் இந்தியா வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.