Home மாவட்டங்கள் பெங்களூர் ஆட்சிக் கவிழ்ப்பு சதி – ஆஜராகவில்லை

ஆட்சிக் கவிழ்ப்பு சதி – ஆஜராகவில்லை

சென்னை: ஜூலை 7-
குதிரை பேரம் தொடர்​பான வழக்​கில் சம்​மன் அனுப்​பி​யும் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது தம்பி அசோக்​கு​மார் நேற்று ஆஜரா​காத​தால், அவர்​களை கைது செய்ய தமிழகம் மற்​றும் அண்டை மாநிலங்​களில் தனிப்​படை போலீ​ஸார் தீவிர தேடு​தல் வேட்​டை​யில் இறங்கி உள்​ளனர்.
சட்​டப்​பேர​வை​யில் நம்​பிக்கை இல்​லாத் தீர்​மானம் கொண்டு வரும்​போது, அரசுக்கு எதி​ராக வாக்​களித்​தால் ரூ.35 கோடி தரு​வ​தாக திமுக​வினர் தன்​னிடம் பேரம் பேசி​ய​தாக ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா, சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் புகார் கொடுத்​தார். ஆட்சியைக் கவிழ்க்க கார்ப்​பரேட் நிறு​வனம் மூலம் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்​கப்​பட்​ட​தாக​வும் அதிர்ச்சி தகவல்​கள் வெளி​யாகின.
இதுகுறித்து சென்னை திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, யூ-டியூபர் திரு​நாவுக்​கரசு உட்பட 9 பேரை கைது செய்​தனர். அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில், ஆட்​சிக் கவிழ்ப்பு சதித் திட்​டத்​தின் பின்​னணி​யில் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது தம்பி அசோக்​கு​மார் இருப்​பது அம்​பல​மான​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.
இதையடுத்​து, இந்த வழக்​கில் அவர்​களும் முக்​கிய குற்​ற​வாளி​களாக சேர்க்​கப்​பட்​டனர். கரூர் மாவட்​டம் ராமேஸ்​வரப்​பட்​டி​யில் உள்ள அவர்​களது பூர்​வீக இல்​லத்​தில், தந்தை வேலுச்​சாமி​யிடம் போலீ​ஸார் சம்​மன் வழங்​கினர்.
திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் நேற்று (ஜூலை 6) காலை 10.30 மணிக்கு இரு​வரும் ஆஜராக வேண்​டும் என்று உத்​தர​விடப்​பட்​டிருந்​தது. ஆனால், அவர்​கள் இரு​வரும் நேற்று ஆஜராக​வில்​லை.
அவர்​களது செல்​போன்​கள் ‘சு​விட்ச் ஆஃப்’ செய்​யப்​பட்​டிருந்​தன. அவர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர்​களும் யாரும் வரவில்​லை. எந்த நேரத்திலும் கைது இதையடுத்​து, இரு​வருக்​கும் மீண்​டும் சம்​மன் அனுப்​பலாமா அல்​லது வேறு சட்ட நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளலாமா என்று போலீ​ஸார் தொடர்ந்து ஆலோ​சித்து வரு​கின்​றனர்.