Home செய்திகள் தேசிய செய்திகள் ஆட்சியை தீர்மானிக்கும் 54 தொகுதிகள்

ஆட்சியை தீர்மானிக்கும் 54 தொகுதிகள்

கொல்கத்தா: மார்ச் 28:
மேற்கு வங்க மாநிலத்​தில் ஆட்​சி​யைப் பிடிக்​கப் போவது யார் என்​ப​தைத் தீர்​மானிக்​கும் பகு​தி​யாக வடக்கு வங்​கத்​தில் உள்ள 54 தொகு​தி​கள் அமைந்​துள்​ளன.
மேற்கு வங்க பேர​வை​யில் உள்ள 294 தொகு​தி​களுக்கு வரும் ஏப்​ரல் 23, 29-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. தேர்​தலை​யொட்டி ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், எதிர்க்​கட்​சி​யான பாஜக, காங்​கிரஸ், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் தீவிர பிரச்​சா​ரத்தை முன்​னெடுத்து வரு​கின்​றன.
இந்​நிலை​யில் மேற்கு வங்​கத்​தில் அடுத்த யார் ஆட்​சி​யைப் பிடிக்​கப் போகிறார்​கள் என்​ப​தைத் தீர்​மானிக்​கும் தொகு​தி​களாக வடக்கு வங்​கத்​தில் அமைந்​துள்ள 54 தொகு​தி​கள் அமைந்​துள்​ளன. வடக்கு வங்​கப்​பகு​தி​களில் அதிக அளவில் தேயிலைத் தோட்​டங்​கள் அமைந்​துள்​ளன. டார்​ஜிலிங் மலைப்​பகு​தி, ஜல்​பைகுரி, மால்​டா, சிலிகுரி, காலிம்​போங், கூச்​பெஹார் உள்​ளிட்ட பகு​தி​கள் இந்த வடக்கு மண்​டலப் பகு​தி​யில் அமைந்​துள்​ளன.
கடந்த 2011-ல் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ், மேற்கு வங்​கத்​தில் ஆட்​சி​யைப் பிடித்​தது. அப்​போது மா, மாதி, மானுஷ் (தாய், தாய்​நாடு, மக்​கள்) என்ற தாரக மந்​திரத்​தைக் கூறி வாக்​கு​களை திரிண​மூல் காங்​கிரஸ் அள்​ளியது. இங்​குள்ள 54 தொகு​தி​களில் 28 தொகு​தி​களை அந்​தக் கட்சி பெற்​றது. 2016-லும் இதே அளவுக்கு தொகு​தி​களை இங்கு திரிண​மூல் கைப்​பற்​றியது. அதே​நேரத்​தில் 2016-ல் பாஜக இங்கு 7 இடங்​களைக் கைப்​பற்​றியது.
2021-ம் ஆண்டு தேர்​தலில் 54-ல் 30 தொகு​தி​களை திரிண​மூல் காங்​கிரஸ் கைப்​பற்றி 3-வது முறை​யாக மேற்கு வங்​கத்​தில் ஆட்​சி​யமைத்​தது. அந்த அளவுக்கு முக்​கி​யம் வாய்ந்த தொகு​தி​களாக வடக்கு வங்​கம் அமைந்​துள்​ளது. ஆனால் இந்த முறை பாஜகவை சேர்ந்த சில மாவட்ட தலை​வர்​கள் திரிண​மூல் காங்​கிரஸுக்​குத் தாவி​யுள்​ள​தால் அக்​கட்​சிக்கு இந்த மண்​டலத்​தில் பின்​னடைவு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் திரிண​மூல் காங்​கிரஸ் அதிக தொகு​தி​களைப் பெறும் எனத் தெரி​கிறது.
ராஜ்பன்​ஷி, காம்​டாபுரி இன மக்​கள் இங்கு அதிக அளவில் உள்​ளனர். அவர்​கள் பல ஆண்​டு​களாக இந்​தத் தொகு​தி​களில் செய்ய வேண்​டிய வசதி​கள், வளர்ச்​சி, மக்​கள் நலத் திட்​டங்​கள் தொடர்​பாக மக்​கள் பிர​தி​நி​தி​களிடம் போராடி வரு​கின்​ரனர். டார்​ஜிலிங் பகு​தி​யில், கூர்க்​காலாந்து இயக்​கத்​தைச் சேர்ந்​தவர்​கள் அதிக அளவில் உள்​ளனர். இந்​தத் தொகு​தி​களில் கூர்க்​காலாந்து இயக்​கத்​தைச் சேர்ந்​தவர்​களு​டன் திரிண​மூல், பாஜக கட்​சிகள் கூட்​டணி வைத்து வெற்றி கண்டு வரு​கின்​றன.