Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தியா நிர்வகித்து வரும் சபாகர் துறைமுகம் மேலும் விரிவுபடுத்தப்படும்

இந்தியா நிர்வகித்து வரும் சபாகர் துறைமுகம் மேலும் விரிவுபடுத்தப்படும்

புதுடெல்லி: ஏப்ரல் 8-
இந்​தியா நிர்​வகித்து வரும் சபாகர் துறைமுகம் மேலும் விரிவுபடுத்​தப்​படும் என்று ஈரான் தூதர் முகமது பத்​தாலி தெரி​வித்​துள்​ளார்.
ஈரான் நாட்​டின் தென்​முனை​யில் ஓமன் வளை​கு​டா​வில் சபாகர் துறை​முகம் அமைந்​துள்​ளது. அந்த துறை​முகத்தை விரிவுபடுத்த கடந்த 2003-ம் ஆண்​டில் இந்​தி​யா, ஈரான் இடையே ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. கடந்த 2018 முதல் சபாகர் துறை​முகத்தை இந்​தியா நிர்​வகித்து வரு​கிறது. அங்​கிருந்து பெர்​சிய வளை​குடா நாடு​கள், ஆப்கானிஸ்​தான், மத்​திய ஆசிய நாடு​கள் மற்​றும் ஐரோப்பிய நாடு​களுக்கு இந்​திய சரக்​கு​கள் ஏற்​றுமதி செய்​யப்​பட்டு வரு​கின்​றன.
பல்​வேறு காலக்​கட்​டங்​களில் ஈரான் மீது அமெரிக்கா​வும் ஐரோப்பிய நாடு​களும் பொருளா​தார தடைகளை விதித்தன. ஆனால் இந்​தியா உடனான நட்​புறவு காரணமாக சபாகர் துறை​முகத்​துக்கு மட்​டும் அமெரிக்கா தொடர்ந்து விலக்கு அளித்து வரு​கிறது. இது ஈரானுக்​கும் வரப்​பிர​சாத​மாக அமைந்​திருக்​கிறது. பொருளா​தார தடை அமலில் இருந்​தா​லும் சபாகர் துறை​முகம் வழி​யாக ஈரானுக்கு தேவை​யான பொருட்​கள் இறக்​குமதி செய்யப்பட்டு வரு​கின்​றன.
கடந்த பிப்.28-ல் அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படை இணைந்து ஈரான் மீது போர் தொடுத்​தது. கடந்த மார்ச் மாதத்​தில் சபாகர் பகு​தி​யில் உள்ள ராணுவ தளங்​கள் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் குண்​டுமழை பொழிந்​தன. ஆனால் சபாகர் துறை​முகம் மீது மட்​டும் தாக்குதல் நடத்​தப்​பட​வில்​லை. இதுகுறித்து இந்​தி​யா​வுக்​கான ஈரான் தூதர் முகமது பத்தாலி கூறிய​தாவது: அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரானுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இதனால் மேற்கு ஆசியா முழு​வதும் பதற்​ற​மான சூழல் நில​வு​கிறது. ஈரான் மீது பல்​வேறு பொருளா​தார தடைகள் விதிக்​கப்​பட்டு உள்​ளன. இந்த இக்​கட்​டான சூழலிலும் இந்தி​யா, ஈரான் இடையி​லான பொருளா​தார உறவு வலுவாக இருக்​கிறது.
பரஸ்பர நன்​மை, நம்​பிக்கை அடிப்​படை​யில் இரு நாடு​கள் இடையே பொருளா​தார ஒத்​துழைப்பு தொடர்ந்து மேம்பட்டு வரு​கிறது. இந்த பொருளா​தார உறவு மேலும் வலுவடை​யும்.
போருக்​குப் பிறகு சபாகர் துறை​முகம் மேலும் விரிவுபடுத்​தப்​படும். இரு நாடு​கள் இடையி​லான உறவில் சபாகர் துறை​முகம் மிக முக்​கிய பங்கு வகிக்கிறது. இந்​தி​யா, ஈரான் மட்​டுமன்றி இந்த பிராந்தியம் முழு​வதற்​கும் சபாகர் துறை​முகத்​தில் இருந்து சரக்​கு​கள் ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.