Home மாவட்டங்கள் பெங்களூர் இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்

இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்

சென்னை: மார்ச் 12-
“சார், தயவுசெஞ்சு லைன்ல வாங்க.. முன்னாடி வண்டி நகந்தப்புறம் போலாம்” – இந்த வார்த்தையை கேட்டு எத்தனை நாளாச்சு? கிட்டத்தட்ட 5 வருஷத்துக்கு முன்னாடி, கொரோனா லாக்டவுன் சமயத்துல மளிகை கடை வாசல்லயும், மெடிக்கல் ஷாப் வாசல்லயும் கேட்ட அதே குரல். ஆனா, இந்த தடவை இது கேட்டது ரேஷன் கடையில இல்ல.. ஒரு பெட்ரோல் பங்க்-ல.. பெட்ரோல் பங்குகளில் என்னதான் நிலைமை.. ஒரு பர்சனல் அனுபவம்! நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி இருக்கும். வழக்கமாக இந்த நேரத்தில் சென்னை சாலைகள் நிசப்தமாக இருக்கும். ஆனால், பெட்ரோல் பங்க் பக்கம் வண்டியைத் திருப்பியபோது எனக்கு ஒரு நிமிடம் ‘சுருக்’கென்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வண்டிகளின் நீண்ட வரிசை.
பகலில் கூட்டம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் நள்ளிரவு 2 மணிக்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பது, ஏதோ ஒரு பெரிய ஆபத்து நம்மை நெருங்கிவிட்டதோ என்ற ‘சில்’லென்ற உணர்வைத் தருகிறது. அந்த பழைய ‘கொரோனா’ ஞாபகங்கள் வரிசையில் காத்திருந்த அந்த ஒரு மணி நேரமும் என் மனது 2020-21 லாக்டவுன் நாட்களுக்கே சென்றது. அப்போது எப்படி பால் பாக்கெட்டுக்கும், மருந்துக்கும் அதிகாலையிலேயே வரிசையில் நின்று ‘நாளைக்கு உலகம் எப்படி இருக்குமோ?’ என்ற ஒருவித ‘Doom’ ஃபீலிங்கில் (உலகமே முடியப்போகிறது என்ற பயம்) அலைந்தோமோ, அதே போன்ற ஒரு சூழலை நேற்று உணர முடிந்தது. சுற்றி நின்றவர்களின் முகங்களில் ஒருவிதமான இறுக்கம். யாரிடமும் பேச்சில்லை. ஈரான் போர் பற்றிய செய்திகளும், வாட்ஸ்அப்பில் வரும் வதந்திகளும் சேர்ந்து, நம்மை அறியாமலேயே ஒரு ‘பேனிக்’ (Panic) நிலைக்குத் தள்ளிவிட்டன.அரசாங்கம் “50 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் இருப்பு இருக்கிறது” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், தரைமட்டத்தில் நிலைமை வேறாக இருக்கிறது. கமர்ஷியல் LPG சிலிண்டர்களுக்கு ஏற்கனவே கடும் தட்டுப்பாடு நிலவுவது தெரிந்த விஷயம்தான். நயினார் என்னவோ நானே டீலர்தான்.. கேஸ் தட்டுப்பாடு இல்லை என்கிறார்.. ஆனால் அவரின் கோடோனிலேயே கேஸ் இல்லையாம்.. இன்னொரு பக்கம், பெட்ரோல் மற்றும் டீசலைப் பொறுத்தவரை, ‘ஸ்டாக் தீர்ந்துவிடுமோ’ என்ற பயத்தினால் மக்கள் செய்யும் ‘Panic Buying’ தான் இந்த நீண்ட வரிசைகளுக்கு முக்கியக் காரணம். லாக்டவுன் சமயத்தில் எப்படி அத்தியாவசியப் பொருட்களை அள்ளிச் சேமித்தோமோ, அதே மனநிலை இப்போது பெட்ரோல் விஷயத்திலும் வந்திருக்கிறது. டேங்க் காலியாக இல்லாவிட்டாலும், ‘முன்னெச்சரிக்கை’ என்ற பெயரில் அனைவரும் நள்ளிரவிலும் பங்க்குகளை முற்றுகையிடுவது ஒரு செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

R