Home மாவட்டங்கள் பெங்களூர் இருமாநில எல்லையில் ஆர்ப்பாட்டம்; தமிழக பேருந்துகள் தற்காலிக நிறுத்தம்

இருமாநில எல்லையில் ஆர்ப்பாட்டம்; தமிழக பேருந்துகள் தற்காலிக நிறுத்தம்

ஓசூர்: ஜூலை 15.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களி்ன் எல்லையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பால் தமிழக பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டில் கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்தைக் கண்டித்து தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதே போல், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என இன்று ஓசூர் அருகேயுள்ள தமிழக எல்லையில் கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தும், மேகேதாட்டை நோக்கி பேரணி செய்வதாக போராட்டம் அறிவித்தனர்.