Home விளையாட்டு இளமை துள்ளலுடன் களமிறங்கும் சிஎஸ்கே

இளமை துள்ளலுடன் களமிறங்கும் சிஎஸ்கே

புதுதில்லி, மார்ச் 24 – ஐபிஎல் 2026 சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்​வை… 5 முறை கோப்​பையை வென்​றுள்ள சிஎஸ்கே அணி கடந்த 2008-ல் ஐபிஎல் தொடர் தொடங்​கப்​பட்​ட​திலிருந்து 2023-ம் ஆண்டு சீசன் வரை முதல் நான்கு இடங்​களுக்கு வெளியே சென்​ற​தில்​லை. ஆனால், கடந்த 2 சீசன்​களாக அந்த அணியின் செயல் திறன் சராசரிக்​கும் கீழே சென்றுவிட்டது. 2024-ல் 7-வது இடத்​தைப் பிடித்த சிஎஸ்​கே, அதன் தொடர்ச்சியாக 2025-ல் புள்​ளிப்​பட்​டியலில் கடைசி இடத்​தைப் பிடித்தது. இதன் மூலம், தனது வரலாற்​றிலேயே முதல்​முறை​யாகத் தொடர்ந்து இரண்டு முறை பிளே-ஆஃப் சுற்​றுக்​குத் தகுதி பெறாமல் சிஎஸ்கே ஏமாற்​றம் அளித்​தது. இருப்​பினும், கடந்த சீசனில் சிஎஸ்கே நல்ல படிப்​பினையை கற்​றுக்​கொண்​டது. அது மாற்​றத்​துக்​கான இளம் வீரர்​களின் சக்​தி. ஆயுஷ் மாத்​ரே, டெவால்ட் பிரே​விஸ் ஆகியோர் சிறப்​பாகச் செயல்​பட்​டதைக் கண்ட அணி நிர்​வாகம், ‘டாடி ஆர்​மி’ (வயதான வீரர்​களை அதி​கம் உள்​ளடக்​கிய அணி) என்ற பிம்​பத்​திலிருந்து வில​கி, துடிப்​புள்ள இளம் வீரர்​களின் திறனை நம்பி ஒரு புதிய பயணத்​தைத் தொடங்க முடிவு செய்​துள்​ளது. தொடர்ச்​சி​யாக 3-வது முறை​யாக முதல் நான்கு இடங்களுக்கு வெளியே செல்வதை தவிர்க்க, இந்த ‘இளைஞர் படை’ இந்த ஆண்டு கை கொடுக்​கும் என்று சிஎஸ்கே அணி பெரிதும் நம்​பு​கிறது. இளைஞர்​களே அச்சாணி… கடந்த சீசனில் தொடக்க ஆட்​டங்​களில் பவர்​பிளே​வில் ரன்​கள் சேர்க்க சிஎஸ்கே தடு​மாறியது. இதன் பின்​னர் தொடக்க வீர​ரான ஆயுஷ் மாத்​ரே, மிடில் ஆர்​டர் அதிரடி பேட்​ஸ்​மே​னான தென் ஆப்​பிரிக்​கா​வின் டெவால்ட் பிரே​விஸ் ஆகியோரின் வரு​கைக்கு பின்​னரே ரன் குவிப்பில் சிஎஸ்கே அணி உத்​வேகம் பெற்​றது