Home செய்திகள் உலக செய்திகள் ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்

ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்

டெல் அவிவ்: மார்ச் 10-
“என்னப்பா இது… நீயே ஒரு வழியைக் கண்டுபிடிச்சு இந்த போரை முடிச்சுடு!” – இதுதான் இப்போது இஸ்ரேலிடமிருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குப் போயிருக்கும் ரகசிய மெசேஜ். ‘ஈரானை ஒரு கை பார்ப்போம்’ என்று கிளம்பிய இஸ்ரேல், இப்போது அடிவாங்கிய புலி போல பதுங்கத் தொடங்கியிருக்கிறது. ட்ரம்புக்கு அழுத்தம்: “நமக்கு ஒரு ‘எக்சிட் பிளான்’ வேணும்!” அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசகர்கள் இப்போது கடும் கவலையில் இருக்கிறார்கள். ஒரு பக்கம் விண்ணைத் தொடும் கச்சா எண்ணெய் விலை, இன்னொரு பக்கம் ‘இது எப்போது முடியும்?’ என்றே தெரியாத போர். “இந்த போர் இப்படியே நீண்டால், அது அமெரிக்காவின் அரசியலில் நமக்கே பெரிய ‘பேக்லேஷ்’ (Backlash) ஆகிவிடும். அதனால், ஈரானுடனான இந்தப் போரிலிருந்து வெளியேற ஒரு எக்சிட் பிளான் (Exit Plan) தயார் செய்யுங்கள்” என்று ட்ரம்பை அவரது டீம் நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறது.
யார் யாருக்கு ஆர்டர் போடுவது?’ – இஸ்ரேலின் பீதி! பொதுவாக, இஸ்ரேல் என்ன சொல்கிறதோ அதைத்தான் அமெரிக்கா கேட்கும் என்பது உலகறிந்த ரகசியம். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்! ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, இஸ்ரேலே இப்போது “எப்படியாவது இந்த போரை நிறுத்த வழி இருக்கா?” என்று ‘எக்சிட் ரேம்ப்’ (Exit Ramp) தேடி அலைகிறது.“நாங்க நினைச்ச மாதிரி இது இல்லையே!” என்பதுதான் இஸ்ரேலின் இப்போதைய மைண்ட் வாய்ஸ். ஈரானை அதிரடியாகத் தாக்கத் திட்டமிட்ட இஸ்ரேல், இப்போது ஒரு பெரிய ‘சுழலில்’ சிக்கிக்கொண்டது. ஈரானின் ஒவ்வொரு அடியும் இஸ்ரேலை அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இஸ்ரேலை மொத்தமாக முடக்கி போட்டுள்ளது. ‘ஃபாஃபோ’ (FAFO) என்றால் என்னவென்று புரிந்ததா? இணையத்தில் ‘FAFO என்றொரு வார்த்தை உண்டு. அதாவது, “ஏடாகூடமாக எதையாவது செய்துவிட்டு, அதன் விளைவை அனுபவிப்பது”. இஸ்ரேல் இப்போது அதே நிலைமையில் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் ட்ரம்ப் “இந்த போரை சீக்கிரம் முடிப்பேன்” என்று சொன்னபோது, அவர் ஈரானுக்கு எதிராகப் பேசுகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இஸ்ரேலே இந்த போரால் கடும் பீதியில் (Panic) இருக்கிறது.அதனால், அவர்கள் சொன்னதைத்தான் ட்ரம்ப் அப்படியே செய்துகொண்டிருக்கிறார்.