
வாஷிங்டன்: மார்ச் 18 –
மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா 2,200 கிலோகிராம் எடை கொண்ட குண்டுகளை வீசியுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது
இந்தத் தாக்குதல் ‘ஈரானிய கப்பல் எதிர்ப்பு கிரூஸ் ஏவுகணைகளை’ குறிவைத்தது என்று அமெரிக்க ராணுவம் கூறியது.
பெரும்பாலான அமெரிக்க நட்பு நாடுகள் வணிகக் கப்பல்களை நீர்வழிப்பாதை வழியாக அனுமதிக்க மறுப்பதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளை குறிவைத்து ஈரான் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பெரும் போர் பதற்றம நிலவி வருகிறது
போர் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இது பொருளாதார ரீதியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டும் அது பலன் அளிக்கவில்லை. ஈரான் சரண் அடையும் வரை விடமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதேசமயம் ஈரானும் விட்டுக் கொடுப்பதாக இல்லை நாங்கள் விதிக்கும் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் போரை நிறுத்த தயார் என்று அறிவித்து உள்ளது. என்றாலும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானுக்கு அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து ஆயுதங்கள் வழங்கி வருவதாக போர் கணிப்பு நிபுணர்கள் கூறி வருகின்றனர்
















