Home செய்திகள் தேசிய செய்திகள் ஈரான் கப்பல் மூழ்கிய விவகாரம்: ராகுல் காந்தி விமர்சனம்

ஈரான் கப்பல் மூழ்கிய விவகாரம்: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மார்ச் 6-
இலங்கை அருகே ஐஆர்​ஐஎஸ் டேனா என்ற ஈரான் போர்க்​ கப்​பல் மீது அமெரிக்க நீர்​மூழ்கி நேற்று முன்​தினம் தாக்குதல் நடத்​தி​ய​தில் 87 வீரர்​கள் உயி​ரிழந்​தனர்.
இது தொடர்​பாக எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி நேற்று ‘எக்​ஸ்’ தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: உலகம் ஒரு நிலையற்ற கட்​டத்​தில் நுழைந்​துள்​ளது. புயல் நிறைந்த கடல்​கள் நம் முன்​னால் உள்​ளன. இந்​தி​யா​வின் எண்​ணெய் விநி​யோகம் அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யுள்​ளது. நமது இறக்​கும​தி​யில் 40 சதவீதத்​துக்​கும் அதி​க​மானவை ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​கின்​றன.
எல்​பிஜி மற்​றும் எல்​என்​ஜிக்கு நிலைமை மோச​மாக உள்​ளது. இந்தி​யப் பெருங்​கடலில் ஈரான் போர்க்​கப்​பல் மூழ்​கடிக்​கப்​பட்ட நிலை​யில், போர் நமது கொல்​லைப்​புறத்தை எட்​டி​யுள்​ளது. ஆனால் பிரதமர் எது​வும் சொல்​ல​வில்​லை. நமக்கு ஸ்திர​மான தலைமை தேவை. அதற்கு பதிலாக, இந்​தியா நமது சுயாட்​சியை விட்​டுக்​கொடுத்த பிரதமரைக் கொண்​டுள்​ளது.இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.