Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் திடீரென ஹார்முஸை திறந்தது ஏன்?

ஈரான் திடீரென ஹார்முஸை திறந்தது ஏன்?

தெஹ்ரான்: ஏப்ரல் 18-
மத்திய கிழக்கில் கடந்த சில வாரங்களாக உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த ‘ஹார்முஸ் ஜலசந்தி’ விவகாரத்தில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் திடீரென இதுபோல நிலைப்பாட்டை மாற்ற என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம். ஈரான் – அமெரிக்கா இடையிலான நேரடி மோதல் கடந்த ஒரு மாதமாக நடந்தது. போர், முற்றுகை, எச்சரிக்கை என உலக நாடுகளை இந்த மோதல் அச்சுறுத்தி வந்தது. இதன் காரணமாகச் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டது. ஏனென்றால் இந்த மோதல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்தைப் பெரிதும் பாதித்தது. ஹார்முஸ் உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாக ஹார்முஸ் கருதப்படும் நிலையில், அது முடங்கியது அழுத்தத்தை அதிகரித்தது. இந்தியா உட்பட ஆசிய நாடுகள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா ஈரான் இடையே இந்த விவகாரத்தில் 15 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அப்போது ஹார்முஸை சர்வதேச கப்பல்களுக்குத் திறந்துவிடுவதாக ஈரான் அறிவித்தது. ஆனால், இந்த நல்ல செய்தி சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.. அப்போது லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஆத்திரமடைந்த ஈரான், உலக நாடுகளின் எரிசக்தி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது. இதனால் மீண்டும் சப்ளை செயின் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கு நடுவே நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படாத ஈரான் மீது அமெரிக்கக் கடற்படை முற்றுகையிடும் என்று ட்ரம்ப் அறிவித்தது தனிக்கதை. இது சீனாவைப் போன்ற நாடுகளுக்குப் பெரும் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியது.ஈரான் கதவுகளைத் திறந்தாலும், ட்ரம்ப் தனது முற்றுகையை விலக்க மறுப்பது ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. லெபனான் போர் நிறுத்தம் உலகிற்கு ஒரு இடைவெளியைக் கொடுத்திருக்கிறது. ஆனால், ட்ரம்ப்பின் திட்டம் முழுமையடையும் வரை மத்திய கிழக்கில் முழுமையான அமைதி திரும்புமா என்பது சந்தேகமே.