Home செய்திகள் தேசிய செய்திகள் ஈரான் போர் தாக்கம்: இந்தியாவில் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு

ஈரான் போர் தாக்கம்: இந்தியாவில் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு

புதுடெல்லி: மார்ச் 6-
இஸ்​ரேல், ஈரான் போரால் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.இது தொடர்​பாக இந்​திய அரிசி ஏற்​றும​தி​யாளர்​கள் கூட்டமைப்பு (ஐஆர்​இஎப்), வேளாண் மற்​றும் பதப்​படுத்​தப்​பட்ட உணவுப் பொருட்​கள் ஏற்​றுமதி மேம்​பாட்டு ஆணையத்​திடம் (ஏபிஇடிஏ) சமர்ப்​பித்​துள்ள கோரிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது:இஸ்​ரேல், ஈரான் இடையி​லான போர் காரண​மாக, மத்​திய கிழக்கு நாடு​களுக்​கான கப்​பல் போக்​கு​வரத்து ரத்து செய்யப்​பட்​டுள்​ள​தால், துறை​முகங்​களில் 2 லட்​சம் மற்றும் நடு​ வழி​யில் 2 லட்​சம் என மொத்​தம் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.போர் பதற்​றத்​தால் வளை​குடா நாடு​களுக்​குச் செல்​லும் கப்​பல்​களுக்​கான காப்​பீட்டு பிரீமி​யம் மற்​றும் போர்க்​கால கூடு​தல் கட்​ட​ணங்​கள் கணிச​மாக உயர்ந்துள்​ளன.
இதனால் சர்​வ​தேச சரக்கு போக்​கு​வரத்து கட்​ட​ணம் 15-20% வரை அதி​கரித்​துள்ளது. மேலும் கப்​பல் எரிபொருள் விலை ஒரு டன்​னுக்கு 520 டாலரிலிருந்து 580 டால​ராக உயர்ந்​துள்​ளது.இந்த போக்​கு​வரத்து இடையூறுகளால் உள்​நாட்​டிலும் கடந்த 72 மணி நேரத்​தில் பாசுமதி அரிசி​யின் விலை 7-10% வரை சரிந்​துள்​ளது. இது ஏற்​றும​தி​யாளர்​களின் நடை​முறை மூலதனத்​தில் பெரும் அழுத்​தத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.
முக்​கிய கோரிக்​கைகள் போர் பதற்​றம் காரண​மாக கப்​பல்​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தால் துறை​முகங்​களில் தேங்​கும் சரக்​கு​களுக்​கான சேமிப்பு மற்​றும் தாமதக் கட்​ட​ணங்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும்.
பாதி​யில் நிற்​கும் சரக்​கு​களைத் திருப்பி அனுப்ப அல்​லது வேறு இடத்​துக்கு மாற்ற சுங்​கத்​துறை மற்​றும் ரிசர்வ் வங்கி மூலம் உரிய ஆவண உதவி​களை வழங்க வேண்​டும். இந்த நெருக்​கடியை ஒரு ‘தவிர்க்க முடி​யாத சூழலாக’ அறிவிக்க வேண்​டும். இதன் மூலம் ஒப்​பந்​தங்​களை நிறை
வேற்​றத் தவறும் பட்​சத்​தில் விதிக்​கப்​படும் அபராதங்​களைத் தவிர்க்க முடி​யும்.
கரோனா தொற்று காலக்​கட்​டத்​தில் வழங்​கப்​பட்​டது போன்ற கூடு​தல் கடன் வசதி​கள் மற்​றும் கடனைத் திருப்​பிச் செலுத்​தும் கால அவகாசத்தை வங்​கி​கள் வழங்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.