Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் போர் நிறுத்தம்: பிட்காயின் விலை 72000 டாலர்

ஈரான் போர் நிறுத்தம்: பிட்காயின் விலை 72000 டாலர்

வாஷிங்டன்: ஏப்ரல் 8
கிரிப்டோ சந்தையில் பிட்காயின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்துள்ளது, எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல், இன்று முதலீட்டு சந்தை இயல்பு நிலைக்கு திரும்ப மிக முக்கியமான காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஈரானுடன் இரண்டு வாரங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய போர் நிறுத்தத்தை அறிவித்தததும், இதை ஈரான் உடனுக்குடன் ஏற்றதும் தான் இன்றைய முதலீட்டு சந்தை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பிட்காயின் விலை இன்றைய வர்த்தகத்தில் 72,000 டாலருக்கு மேல் சென்றுள்ளது. இந்த போர் நிறுத்த அறிவிப்பு உலகளாவிய சந்தையில் பதற்றத்தை சற்று குறைத்து, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளதை காட்டுகிறது.
20 நாட்களில் உச்சம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிட்காயின் விலை 20 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக 72,000 டாலரை கடந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்த நிலையில், ஈரானும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்குப் வெளியான ஒரு மணி நேரத்திற்குள் பிட்காயின் சுமார் 6% உயர்ந்து 72,732.43 டாலர் வரை சென்றது. பொதுவாக அரசியல் பதற்றம் கிரிப்டோ சந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.ஆனால் இத்தகைய போர் நிறுத்த அறிவிப்பு சிக்னல்கள் வந்தால் விலைகள் வேகமாக உயர்வது வழக்கம்.