Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் போர் நிறுத்த விவகாரம்: சீன, அமெரிக்க அதிபர்கள் பேச்சு தோல்வி

ஈரான் போர் நிறுத்த விவகாரம்: சீன, அமெரிக்க அதிபர்கள் பேச்சு தோல்வி

பெய்ஜிங்: மே 16 –
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீன பயணத்தை நிறைவு செய்து பெய்​ஜிங்​கில் இருந்து நேற்று வாஷிங்​டன் சென்​றார். சீன அதிபர் ஜி ஜின்​பிங் உடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருதரப்பு வர்த்​தகம், வரி விதிப்​பு, தைவான், ஈரான் விவ​காரங்​கள் குறித்து ஆலோ​சனை​ நடத்​தினார்.
ஈரானிடம் உள்ள யுரேனி​யத்தை கைப்​பற்ற வேண்​டும். ஹார்​முஸ் ஜலசந்​தியை அமெரிக்​கா​வின் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வர வேண்​டும். ஈரான் போருக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்க வேண்டும் என்​பது அதிபர் ட்ரம்​பின் பிர​தான நோக்​கங்​களாக உள்ளன. இதுதொடர்​பாக சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கிடம் அவர் விரிவான பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.ஈரானின் 90 சதவீத கச்சா எண்​ணெய்யை சீனா வாங்​கு​கிறது.
ஈரானுக்கு தேவையான ஆயுதங்​கள், உணவு தானி​யங்​களை சீனாவே விநியோகித்து வரு​கிறது. எனவே சீனா​வின் நிர்​பந்​தம் மூலம் ஈரான் போருக்கு தீர்வு காண முடி​யும் என்று ட்ரம்ப் திட்​ட​மிட்டு இருந்​தார். இதுதொடர்​பாக சர்​வ​தேச அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: சீனா​வுக்​கும் ஈரானுக்​கும் மிக நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. மூன்​றாம் தரப்பு நாடு​களில் இருந்து ஈரானுக்கு தேவை​யான ஆயுதங்​களை சீனா தொடர்ந்து விநி​யோகம் செய்து வரு​கிறது.
மேலும் ஹார்​முஸ் ஜலசந்தி தொடர்ந்து ஈரானின் கட்​டுப்​பாட்​டில் மட்​டுமே இருக்க வேண்​டும் என்று சீனா விரும்​பு​கிறது. இந்த காரணங்​களால் சீன அதிபர் ஜி ஜின்​பிங் சாதக​மான பதில் அளிக்​க​வில்லை. ஈரானில் போர் நிறுத்​தத்தை அமல்​படுத்த சமரச முயற்​சிகளில் ஈடுபட மட்​டுமே சீன அதிபர் உறுதி அளித்​திருக்​கிறார். சீன, அமெரிக்க அதிபர்​கள் நடத்​திய பேச்​சு​வார்த்தை தோல்வியில் முடிந்​திருக்​கிறது. இவ்​வாறு சர்​வ​தேச அரசி​யல்​ நோக்​கர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்.