Home மாவட்டங்கள் பெங்களூர் உடலை வாங்க மறுத்து போராட்டம்

உடலை வாங்க மறுத்து போராட்டம்

மதுரை: ​ மார்ச் 7-
நாங்குநேரி அருகே பெரும்​பத்து கிராமத்​தில் நடை​பெற்ற இரட்டை கொலை வழக்​கில் கைது எண்​ணிக்கை 8 ஆக உயர்ந்​துள்​ளது. இச்​சம்​பவத்​தில் தொடர்​புடைய அனை​வரை​யும் கைது செய்​யக்​கோரி, 4-வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர்.
நாங்குநேரி அருகே கடந்த 2-ம் தேதி ஒரு கும்​பல் சரமாரி​யாக அரி​வாளால் வெட்​டிய​தில், ஒடிசா தொழிலாளி திரி​நாத் கட்டா மற்​றும் பெரும்​பத்​தைச் சேர்ந்த மாற்​றுத் திற​னாளி ஜான் ஆகிய 2 பேர் கொலை செய்​யப்​பட்​டனர்.இதுதொடர்​பாக, 7 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்​நிலை​யில், மஞ்​சங்​குளம் மகா​ராஜன் என்​பவர் நேற்று கைது செய்​யப்​பட்​டார். இதனால், இச்​சம்​பவத்​தில் கைதானவர்​களின் எண்​ணிக்கை 8 ஆக உயர்ந்​துள்​ளது. மேலும் சிலரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். இந்​தச் சம்​பவத்தை கண்​டித்து பொது​மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். வழக்​கில் தொடர்​புடைய அனை​வரை​யும் கைது செய்​யும் வரை, உடலை வாங்க மறுத்து நேற்று 4-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.
அதே வேளை​யில் ஒடிசா தொழிலாளி திரி​நாத் கட்​டா​வின் உடல் ஏற்​கெனவே அடக்​கம் செய்​யப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது. நீதி​மன்​றத்தில் முறையீடு இதனிடேயே நாங்குநேரி சம்​பவம் தொடர்​பாக உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி ராமன் அமர்​வில் வழக்​கறிஞர் ஆயிரம் கே.செல்​வகு​மார் ஆஜராகி, எந்​தக் காரண​மும் இல்​லாமல் கொலை செய்​யப்​பட்ட புலம்​பெயர்ந்த தொழிலா​ளி​யின் குடும்​பத்​துக்​குத் தேவை​யான நிவாரணம் வழங்​கு​வது தொடர்​பாக​வும், கொலை​யாளி​கள் மீது கடும் நடவடிக்கை எடுப்​பது தொடர்​பாக​வும் உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​குப் பதிந்து விசா​ரிக்க வேண்​டும் எனக் கோரி​னார்.
பின்​னர் நீதிப​தி​கள், நாங்குநேரி விவ​காரத்​தில் தமிழக அரசின் நிலைப்​பாடு தொடர்​பாக தகவல் பெற்று நீதி​மன்​றத்​துக்​குத் தெரிவிக்க அரசு வழக்​கறிஞருக்​கு உத்​தர​விட்​டனர்​.