Home செய்திகள் உலக செய்திகள் ‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ – ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை

‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ – ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை

வாஷிங்டன் டி.சி. , மார்ச் 14- ‘‘ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஈரான் ராணுவமும், அதன் ஆட்சியுடன் தொடர்புடையவர்களும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். ஏனெனில், அங்கு எஞ்சி இருப்பது மிகக் குறைவே’’ என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பது குறித்த செய்திகளை வெளியிடுவதை போலிச் செய்தி ஊடகங்கள் வெறுக்கின்றன. அமெரிக்க ராணுவத்தால் ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது; அது ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது. ஆனால் அது நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஒப்பந்தம் அல்ல என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை மீது தனக்கு இருக்கும் அதிருப்தியையும்” அவர் வெளிப்படுத்தி உள்ளார். ட்ரம்ப் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “முழு மத்திய கிழக்கையும் கைப்பற்றவும் இஸ்ரேலை முழுமையாக அழித்தொழிக்கவும் ஈரான் திட்டமிட்டிருந்தது. அந்த திட்டங்கள் அனைத்தும் ஈரானைப் போலவே இப்போது அழிந்துவிட்டன” என தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக அவர் வெளியிட்ட ஒரு நீண்ட பதிவில், “சில நிமிடங்களுக்கு முன்பு எனது வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க மத்திய கட்டளை (அமெரிக்க ராணுவம்), மத்திய கிழக்கின் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் ஒன்றை செயல்படுத்தியது.