ஏழை மக்களுக்காக எது​வுமே செய்யப்படவில்லை: கார்கே புகார்

புதுடெல்லி: பிப்ரவரி 2-
மத்​திய அரசின் பட்ஜெட்டில் ஏழைகளுக்​காக எது​வுமே செய்​யப்​பட​வில்லை என்று காங்​கிரஸ் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் மல்லிகார்ஜுன கார்கே விமர்​சனம் செய்துள்ளார். 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட்டை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் நாடாளுமன்றத்​தில் நேற்று தாக்​கல் செய்​தார். இதுகுறித்து காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் கார்கே நேற்று கூறியதாதவது:
பிரதமர் மோடி மத்​திய அரசாங்​கத்​திடம் யோசனை​கள் தீர்ந்​து​விட்​டன. பட்​ஜெட் 2026 இந்​தி​யா​வின் பல பொருளாதார, சமூக மற்​றும் அரசி​யல் சவால்​களுக்கு ஒரு தீர்​வை​யும் வழங்​க​வில்​லை.
ஏழை மக்​களுக்​காக பட்ஜெட்டில் எது​வுமே செய்​யப்​பட​வில்​லை.
“திட்​டச் செயல்​பாடு முறை” இப்​போது “சவாலான பாதை” ஆகி​விட்​டது. கொள்​கை​யில் தொலைநோக்கு பார்வை இல்லை, அரசி​யல் உறு​திப்​பாடு இல்​லை. நமக்கு அன்னமிடும் விவ​சா​யிகள் இன்​னும் அர்த்​த​முள்ள நலத்திட்ட ஆதரவு அல்​லது வரு​மான பாது​காப்பு திட்டத்துக்​காகக் காத்​திருக்​கின்​றனர். சமத்​து​வ​மின்மை பிரிட்​டிஷ் ஆட்​சி​யின் கீழ் காணப்​பட்ட நிலைகளை தாண்டி​விட்​டது, ஆனால் பட்​ஜெட் அதை பற்றி குறிப்​பிடக்​கூட இல்​லை.
பட்​டியல் சாதி, பழங்​குடி​யினர், இதர பிற்​படுத்​தப்​பட்​டோர், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய பிரி​வினர் மற்​றும் சிறு​பான்மை சமூகங்​களுக்கு எந்த ஆதர​வை​யும் இந்த பட்ஜெட் வழங்​க​வில்​லை.
நிதி ஆணை​யத்​தின் பரிந்துரைகளை மேலும் ஆய்வு செய்ய வேண்​டும். ஆனால் கடுமை​யான நிதி நெருக்​கடி​யில் உள்ள மாநில அரசுகளுக்கு அவை எந்த நிவாரணத்​தை​யும் வழங்குவதாக தெரிய​வில்​லை. கூட்​டாட்​சித் தத்​து​வம் பலியாகிவிட்டது.