Home விளையாட்டு ஐபிஎல் போட்​டி​யில் லக்னோ அணிக்​காக 3-வது வீர​ராக களமிறங்குகிறார் ரிஷப் பந்த்

ஐபிஎல் போட்​டி​யில் லக்னோ அணிக்​காக 3-வது வீர​ராக களமிறங்குகிறார் ரிஷப் பந்த்

புதுடெல்லி, மார்ச் 23- வரும் ஐபிஎல் போட்​டி​யில் லக்னோ சூப்​பர் ஜெயன்ட்​ஸ் ​(எல்​எஸ்​ஜி) அணிக்​காக ரிஷப் பந்த் 3-வது வீரராக களமிறங்​கப் போவ​தாக தெரிய​வந்​துள்​ளது. 2026-ம் ஆண்​டுக்​கான ஐபிஎல் சீசன் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்​ளது. இந்​தப் போட்​டிக்​காக எல்​எஸ்ஜி அணி வீரர்​கள் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். 2025-ம் ஆண்டு நடை​பெற்ற ஏலத்​தில் எல்​எஸ்ஜி அணிக்​காக ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்த் எடுக்​கப்​பட்​டிருந்​தார். இதனால் அவர் மீது ஏராள​மான எதிர்​பார்ப்பு ரசிகர்​களுக்கு இருந்​தது. ஆனால், கடந்த சீசனில் அவர் எதிர்​பார்த்த அளவுக்கு பிர​காசிக்​க​வில்​லை. இதன் காரண​மாக இந்த சீசனில் எல்​எஸ்ஜி அணிக்​காக அவர் 3-வது இடத்​தில் இறங்கி விளை​யாடப் போவ​தாகத் தெரிய​வந்​துள்​ளது. அவர் இது​வரை ஐபிஎல் போட்​டிகளில் 4-வது வீர​ராகவே களமிறங்கி வந்​தார். இதையடுத்து 3-வது வீர​ராக களமிறங்​கும் லக்னோ அணி வீரர் நிக்​கோலஸ் பூரன் 4-வது வீர​ராக விளை​யாடு​வார் எனத் தெரி​கிறது. தற்​போது லக்னோ அணி சென்​னை​யில் முகாமிட்டு பயிற்சி செய்து வரு​கிறது. வரும் ஏப்​ரல் 1-ம் தேதி தனது முதல் ஆட்​டத்​தில் லக்னோ அணி, டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை எதிர்த்து விளை​யாட​வுள்​ளது. எல்​எஸ்ஜி அணி​யின் தொடக்க வீரர்​களாக எய்​டன் மார்க்​ர​மும், மிட்​செல் மார்​ஷும் களமிறங்​கு​வர். அதைத் தொடர்ந்து ரிஷப் பந்த், நிக்​கோலஸ் பூரன் ஆகியோர் களத்​துக்கு வரு​வர் என லக்னோ அணி வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. கடந்த 2025-ம் சீசனில் அவர் 133.17 ஸ்டிரைக் ரேட்​டில் 269 ரன்​கள் எடுத்​திருந்​தார் ரிஷப் பந்த். இதில் ஒரு சதமும் அடித்​திருந்​தார். ஆனால், அவரிட​மிருந்து போது​மான மட்​டை வீச்சு வெளிப்​பட​வில்லை என எல்​எஸ்ஜி அணி நிர்​வாகம் தெரி​வித்​திருந்​தது. நிக்​கோலஸ் பூரனைத் தொடர்ந்து ஆயுஷ் பதோனி, அப்​துல் சமத், ஷபாஸ் அகமது ஆகியோர் நடு​வரிசை​யில் களமிறங்​கு​வர். அதே​நேரத்​தில் லக்னோ அணி​யின் பந்​து​வீச்​சிலும் பின்​னடைவு ஏற்​பட்​டுள்​ளது. அணி வீரர்​கள் மயங்க் யாதவ், மோசின் கான் ஆகியோர் காயம் காரண​மாக பயிற்​சி​யில் ஈடு​பட​வில்​லை. அவேஷ் கான், அன்​ரிச் நோர்க்​கி​யா​வும் காயம் காரணமாக அவதிப்​படு​கின்​றனர். இதுதொடர்​பாக லக்னோ வட்​டாரங்​கள் கூறும்​போது, “லக்னோ அணி​யின் பேட்​டிங் வரிசை நன்​றாக உள்​ளது.ஆனால் பந்​து​வீச்​சாளர்​கள் காயம் காரண​மாக அவதிப்​பட்டு வரு​கின்​றனர். காயம் காரண​மாக சிகிச்சை முடிந்து திரும்​பி​யுள்ள மயங்க் யாதவ், வலைப் பயிற்​சி​யில் என்ன செய்​யப் போகிறார் என்​ப​தைப் பார்க்​கவேண்​டும். அதைப் போலவே மற்ற பந்​து​வீச்​சாளர்​களுக்கு போட்​டிக்கு முன்​ன​தாக குண​மாகி விடு​வர் என எதிர்​பார்க்​கிறோம்” என்று தெரி​வித்​தன.