Home விளையாட்டு ஐபிஎல் 2026: லக்னோவுக்கு முதல் வெற்றி

ஐபிஎல் 2026: லக்னோவுக்கு முதல் வெற்றி

ஹைதராபாத், ஏப்ரல் 6-
ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதின.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்​தில் ஷார்ட் தேர்டு மேன் திசை​யில் நின்ற மணி​மாறன் சித்​தார்த்​தின் அபாரமான கேட்ச் காரண​மாக வெளி​யேறி​னார். ஷமி தனது அடுத்த ஓவரில் டிரா​விஸ் ஹெட்டை (7) ஆட்டமிழக்கச் செய்​தார். இதன் பின்​னர் பிரின்ஸ் யாதவ் பந்​தில் இஷான் கிஷன் (1) போல்​டா​னார்.பவர்​பிளே​வில் ஹைத​ரா​பாத் அணி 22 ரன்​கள் மட்​டுமே எடுத்​தது. இதையடுத்து களமிறங்​கிய லியாம் லிவிங்​ஸ்​டன் 14 ரன்கள் எடுத்த நிலை​யில் திக்​வேஷ் ராதி பந்​தில் ரிஷப் பந்த்​திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்​டி​னார். 7.1 ஓவர்களில் ஹைத​ரா​பாத் அணி 26 ரன்​களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்​தது. இதன் பின்​னர் ஹெய்ன்ரிச் கிளாசனுடன் இணைந்த நித்​திஷ் குமார் ரெட்டி அதிரடி​யாக விளை​யாடி​னார். நித்​திஷ் குமார் ரெட்டி 33 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 3 பவுண்டரி​களு​டன் 56 ரன்​களும், ஹெய்ன்​ரிச் கிளாசன் 41 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 62 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழந்​தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 63 பந்​துகளில் 116 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து ஹர்ஷ் துபே 0, ஷிவாங்க் குமார் 5, ஹர்​ஷால் படேல் 4 ரன்​களில் நடையை கட்​டினர். 20 ஓவர்​கள் முடி​வில் ஹைத​ரா​பாத் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 156 ரன்​கள் எடுத்​தது.